157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் சட்டம் ஒழுங்கை மீறிச் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு பல்வேறு தவறுகளை இழைத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மீறிச் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக தேர்தல்களை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் இரகசியமான முறையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love