மாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்வைத்த தீர்மானத்திற்கு கிழக்கு மாகாண சபை ஏகமனதாக வாக்களித்துள்ளது. ஆளுனருக்கு அதிகாரம் வழங்கப்படுவதென்பது மக்களாட்சி முறைமைக்கு எதிரானதாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் அவசர காலச் சட்டங்களில் மாத்திரமே ஆளுனருக்கு ஆட்சியில் பங்கேற்கக் கூடிய சாத்தியப்பாடு அரசியலமைப்பில் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்திற்கு முரணாக மக்களால் தமது மாகாண சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளதாக கிழக்கு மாhகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளர்h.
மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆளந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்ததுடன் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.