இலங்கையில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடு முற்றுகைக்குள்ளான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படட் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கல்கிசைப் பகுதியில் வீடொன்றில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டினை பிக்குகள் உள்ளிட்ட சிலர் முற்றுகையிட்டு குழப்பம் ஏற்படுத்தியிருந்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது குறித்த ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் காலி பூசா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த வீடு முற்றுகைக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் நால்வர் கைது
Sep 30, 2017 @ 15:18
இலங்கையில், மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடு முற்றுகைக்குள்ளான சம்பவம் தொடர்பாக பெணகள் இருவர் உட்பட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசைப் பகுதியில் வீடொன்றில் ஐ.நா. அகதிகளுக்கான ஆணையகத்தின் மேற்பார்வையில் 31 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு சென்ற பிக்குகள் உள்ளிட்ட சிலர் முற்றுகையிட்டு குழப்பம் ஏற்படுத்தியிருந்தனர்.
தற்போது குறித்த ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் காலி பூசா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.