அறிவிலும் பண்பிலும் சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், அவர்களது பாதுகாப்பிற்காகவும் வளர்ச்சிக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினத்தை இன்று பொலன்னறுவை றோயல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதை ஒழிப்பு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதையின் பிடியிலிருந்து இளம் தலைமுறையினரை மீட்பதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், அதன்பொருட்டு தேசிய கருத்திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது, பணத்திற்கு அதிக மதிப்பளிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்களை இலவசமாக வழங்க கடந்த காலத்தில் முயற்சித்தனர் எனவும் இத்தகைய சவால்மிகுந்த சூழ்நிலையில் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.