பாஜக அரசின் மூன்று ஆண்டுகால ஆட்சி மக்களை முச்சந்தியில் நிறுத்தி விட்டதாக தமிழக எதிர்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற மோடி அரசு மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாகவும், மக்களுக்கு கொடுத்த ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த பலனும் ஏற்படவில்லை என்று பாஜகவினரே ஒப்புக்கொண்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் திருப்பூரில் பின்னலாடை தொழில் முற்றிலும் முடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மோடி அரசு உடனடியாக இறங்க வேண்டும் என திமுக சார்பாக வலியுறுத்துவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.