இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான முகமது அஜ்மல் ஹக் என்பவரை இந்திய குடிமகன்தான என நிரூபிக்குமாறு இந்திய மத்திய அரசின் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
இவர் ராணுவத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய பின் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றிருந்தார். இந்தநிலையில் இவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் 1971-ம் ஆண்டு பங்களாதேசிலிருந்து இந்தியா வந்ததாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவரை இந்தியக் குடிமகன்தான் என்பதை ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதி தகுந்த ஆவணங்களுடன் முன்னலையாவேன் என அஜ்மல் தெரிவித்துள்ளார். முன்பும் தனக்கு இது போன்று அழைப்பாணை வந்ததாகவும் தகுந்த ஆவணங்களை தாக்கல் செய்தபின் தன்னை இந்திய குடிமகன் என்று தீர்ப்பாயம் அறிவித்ததாகவும் தெரிவித்துள்ள அவர் எதற்காக தன்னை இப்படி பலமுறை அவமானப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.