குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு அரசாங்கத்தினால் நன்மையே ஏற்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுரக்சா காப்புறுதி திட்டத்தை ஆரம்பத்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை மாணவ மாணவியரின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த காப்புறுதி திட்டம் அறிமுகம் செய்பய்பட்டுள்ளது.
இந்த காப்புறுதி தி;ட்டத்தை அறிமுகம் செய்வது தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும், கூட்டு அரசாங்கம் ஆட்சி அமைத்திருக்காவிட்டால் இந்தளவு நலன்களை அடைந்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திபால சிறிசேனா ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களினால் சிறுவர்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பிரகடனங்களுக்கு அமைவாக செயற்படும் அதேநேரம், அவற்றிற்கு அப்பாலும் விரிவான பல செயற்பாடுகளை எதிர்கால சந்ததியினரின் நன்மைக் கருதி தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமைவாக கடந்த இரண்டரை வருட காலத்திற்குள் அரசாங்கத்தினால் சிறுவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
11,242 பாடசாலைகளை சேர்ந்த 45 இலட்சம் மாணவர்களை 24 மணி நேரமும் உள்ளடக்கும் வகையில் இந்த காப்புறுதி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்க கல்வி அமைச்சும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்