196
என்னை விட சிறந்த நடிகர் மோடிதான் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை விடயத்தில் பிரதமர் மோடி சிறந்த நடிகனாக நடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களின் முன்னர் கர்நாடகப் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் அவரது வீட்டில் வைத்து கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். கவுரி லங்கேஷிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோதே பிரகாஷ் ராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை கவுரி லங்கேஷின் படுகொலையை சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடுவதாகவும் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டினார். அவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிட்ட பிரகாஷ் ராஜ், தனது ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே, கவுரி லங்கேஷ் கொலையில் மவுனம் சாதிப்பதாகவும் இந்தியப் பிரதமரை அவர் சாடி கருத்துத் தெரிவித்தார்.
எனவே, இந்தியப் பிரதமர் மோடி தன்னை விட சிறந்த நடிகர் என விமர்சித்த பிரகாஷ்ராஜ், இந்தப் பிரச்னைக்காக தனக்கு வழங்கிய தேசிய விருதுகளை திருப்பளிக்கவும் தயங்க மாட்டேன் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் மேலும் குறிப்பிட்டார்.
Spread the love