பௌத்த மதகுருமாரின் கௌரவத்தை பாதுகாத்தல் பௌத்தர்களின் முதன்மை பொறுப்பாகுமென்பதுடன், பிக்குமாருக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் எவரும் செயற்படக்கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று காலி, தங்கெதர ஸ்ரீ ஜயவர்த்தனாராம விகாரையில் இடம்பெற்ற புத்த பிரானின் திருவுருவ சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எல்லாவற்றையும் விட நாட்டின் பண்பாடு வலுவானதென தெரிவித்த ஜனாதிபதி, அது தொடர்பில் அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
ஒருசில பிக்குமாரின் செயற்பாடுகள் பௌத்த சாசனத்துக்கு பெரும் சவாலாக இருப்பதனால் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பு மகாநாயக்க தேரர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.