குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொருளாதார வளர்ச்சிக்கான ஓரேயொரு வழி முதலாளித்துவமே என பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹமென்ட் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். ஆளும் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு வழங்கிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதன் மூலம் மக்களிற்கும் வர்த்தக சமுகத்திற்கும் உருவாகக்கூடிய நிச்சயமற்ற நிலைக்கு தீர்வை காண்பதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற தொழில்கட்சியின் மாநாட்டில் , அந்த கட்சி உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் மீது சோசலிசம் என்ற கற்பனையை திணிக்க விரும்புவதை வெளிப்படுத்தியுள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொழில்கட்சி அதற்குள் உருடுவியுள்ள தீவிர இடதுசாரிகளின் பிடிக்குள் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சந்தைப்பொருளாதாரத்தின் முழு திறனைiயும் பயன்படுத்துவதன் மூலமே அரசாங்கம் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண முயலும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் பொருளாதாரம் பலவீனமடையவில்லை மாறாக அது உநுதியானதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள நிதியமைச்சர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி வர்த்தக சூழலை பாதித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.