குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மார் அகதிகள் விவகாரத்தில் காவல்துறையினரின் செயற்பாடு ஏற்புடையதல்ல என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கல்கிஸ்ஸ பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரின் ரோஹினிய அகதிகளுக்கு எதிராக போராட்டமென்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அமையவில்லை என தெரிவித்துள்ளார். சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், துணைக் காவல்துறை அத்தியட்சர்கர்கள் ஆகியோரை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
95 வீதமான காவல்துறை உத்தியோகத்தர்கள் தங்களது கடமையை உரிய முறையில் ஆற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐந்து வீதமான காவல்துறை உத்தியோகத்தர்கள் சில அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு அமைய செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.