Home இலங்கைமனுஸ் தீவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு

மனுஸ் தீவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மனுஸ் தீவுகளில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

இவ்வாறான சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மனுஸ் தீவுகளில் இவ்வாறு ஆறு புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர் மரணம் தொடர்பில் புகலிடக் கோரிக்கையாளர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் போதியளவு மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More