குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட் இன்றையதினம் வடக்கிற்கு செல்லவுள்ளார். அங்கு செலிலும் அவர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் வடக்கில் பிரித்தானியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிடவுள்ளதாகவும் மேலும் மீள்குடியேற்ற பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்றையதினம் இலங்கை வந்திருந்த அவர் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, புதிய அரசியலமைப்பு, வடக்கு- கிழக்கு இணைப்பு, மனித உரிமைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அமைச்சர் இலங்கைக்கு பயணம்
Oct 3, 2017 @ 13:42
பிரித்தானிய ஆசிய மற்றும் பசுபிக் விவகார அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். நல்லிணக்கம், நிலக்கண்ணி வெடி அகற்றுதல் மற்றும் வனவிலங்கு வர்த்தகம் போன்ற நடவடிக்கைகள் குறித்து பிரித்தானிய அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
எதிர்வரும் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் உத்தியோகபூர்வமாக அவர் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். அமைச்சர் மார்க் பீல்ட், யாழ்ப்பாணத்திற்கும் பயணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரிய, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் இலங்கை;கான பிரித்தானிய தூதுவர் ஆகியோரை அமைச்சர் மார்க் பீல்ட் சந்திக்க உள்ளார்.