183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்லாந்திற்கு செல்ல உள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அவர் பின்லாந்திற்கான பயணத்தை ஆரம்பிக்க உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, கைத்தொழில் உள்ளிட்ட துறைகளில் புதிய உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்லாந்து பிரதமர் யுஹா சிபிலர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.
Spread the love