உலகம்

நோபள் சமாதான பரிசு பெறுவோருக்கான பரிந்துரைப் பட்டியலில் மைத்திரியின் பெயர் இல்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நோபள் சமாதான பரிசு பெறுவோருக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஒஸ்லோ சமாதான ஆய்வு நிறுவகத்தினால் இந்த பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜனாதிபதி மைத்திரியின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்; வெளியாகியிருந்தன. எனினும் இந்த ஆய்வு நிறுவகத்தின் பணிப்பாளர்களின் பட்டியலில், ஜனாதிபதியின் பெயர் உள்ளடக்கப்படபவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வு நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கிறிஸ்டியன் பெர்க் ஹர்ப்விக்ன் ( Kristian Berg Harpviken   ) மைத்திரியின் பெயரை உள்ளடக்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. எனினும் தற்போதைய பணிப்பாளர் ஹென்ரிக் உர்டால் ( Henrik Urdal ) மைத்திரியின் பெயரை கருத்திற் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply