155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
திட்டமிட்டாறு இன்றைய தினம் போராட்டம் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் என்பன வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் இந்த போராட்டத்திற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வீதிப் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவுகளை மீறி போராட்டத்தை முன்னெடுப்பதாக நாமல் ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
Spread the love