புதிய அரசியலமைப்பில் ஒருமித்த என்ற சொற்பதத்தை ஏற்று இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முன்வந்துள்ளமை தொடர்பில் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளரும், ராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இதுவே சரியான தருணம் எனவும் தற்போது இப்பி;ரச்சினை தீர்க்கப்படாவிடின் இனி எக்காலத்திலும் தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சாதகமான நிலையை குழப்புவதற்கு வடக்கு மற்றும் தெற்கில் சில இனவாதிகள் முயற்சித்து வருகின்றனர் எனவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்த அவர் அதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் இவ்வளவு தூரம் கீழிறங்கி வந்துள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் , இனி எப்போதுமே தீர்வினை எட்டிமுடியாது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.