வடக்கில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கான உதவிகளையும், இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினையும் பெற்றுக்கொடுக்க தொடர்ந்து பங்களிப்பு வழங்கப்படும் என பிரித்தானிய ஆசிய பசுபிக் அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள இன்றையதினம் மார்க் பீல்ட் தலைமையிலான குழுவினர்கள் இன்று வடபகுதிக்கு சென்று அரச அதிகாரிகளை சந்தித்திருந்தனர். இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற அவர்கள் வட மாகாண ஆளுநர் ரெஐpனோல்ட் குரேயையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் ஐக்கிய ராச்சியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பு நாடுகளினால் முன்னேடுக்கப்படுகின்ற வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த மார்க் பீல்ட் இலங்கையில் நல்லிணக்க புரிந்துணர்வு தொடர்பாக பாரிய முன்னேற்றம் இருந்தாலும் மக்களுக்கிடையேயான இன ஐக்கியம் என்பது கட்டியெழுப்பட வேண்டி உள்ளதாகவும் அதறது தம்மால் ஆதரவு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.