கடந்த வருடம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த யுத்த நடவடிக்கைகள் காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி பலியான சிறுவர்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அதிகமாக ஆப்கானிஸ்தானில் மட்டும் 3,512 சிறுவர்கள் பலியாகியுள்ளனர் எனவும் இது மொத்த சிறுவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அப்பாவிச் சிறுவர்களை ஆயுதம் ஏந்தச் செய்து யுத்தத்தில் ஈடுபடுத்துவதும் வேதனைக்குரியது என தெரிவித்த குட்டரஸ் . சோமாலியா மற்றும் சிரியாவில் சிறுவர்களை ஆயுதமேந்தச் செய்யும் நடவடிக்கை கடந்த 2015-ஆம் ஆண்டை விடவும் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்