தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்பட இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய் துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க்; மற்றும ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் குளோட் ஜங்கர் ஆகியோர் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவின் டெல்லிக்கு வந்துள்ள நிலையில் அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினர்.
இதன்போது ரோஹிங்கியா அகதிகள் விவகாரம், வடகொரியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்படவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இணையம் மூலமாக தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பதை தடுப்பது, ஆயுத விநியோகத்தை தடுத்து நிறுத்துவது ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவ்hகள் தெரிவித்துள்ளனர்.