293
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவில் யானைத் தந்தம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து வகையிலான யானைத் தந்த உற்பத்திகளும் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. யானைகளை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு யானைத் தந்த விற்பனையை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரித்தானியாவின் சுற்றாடல் செயலாளர் மைக்கேல் கோவ் ( Michael Gov ) இது குறித்து அறிவித்துள்ளார். கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இசைக் கருவிகளுக்கு மட்டும் இதில் விதி விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Spread the love