விளையாட்டு

சீன ஓபன் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடால் தகுதி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னணி டென்னிஸ் வீரர் ரபால் நடால், சீன ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையின் அடிப்படையில் முதல் நிலை வகிக்கும் ஸ்பெய்ன் வீரர் நடால், சீன ஓபன் அரையிறுதிப் போட்டியில் பல்கேரியாவின்  கிரிகோர் டிமிட்ரோவ் (Grigor Dimitrov   ) ஐ வீழ்த்தி 6-3 4-6 6-1   என்ற செற் கணக்கில்  வீழ்த்தி நடால் வெற்றியீட்டியுள்ளார்.

இந்த டென்னிஸ் பருவ காலத்தில் இதுவரையில் நடால் ஐந்து சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ் (Nick Krygios ) ஜெர்மனியின் அலெக்சாண்டர்  ஷவேரவ் (Alexander Zverev ) ஐ எதிர்த்து ஆட உள்ளார். இந்தப் போட்டியில் வெற்றியீட்டும் வீரர் இறுதிப் போட்டியில் நடாலை எதிர்த்தாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.