நளினிக்கு சொந்தமாக வீடு இல்லை என்ற காரணத்துக்காக பரோல் வழங்க நன்னடத்தை அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து முறையிட உள்ளதாகவும் அவரது சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் சிறையில் உள்ளாரதனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாட்கள் பரோல் கோரி நளினி விண்ணப்பித்திருந்தார்.
இந்த மனுவின் மீது ஆய்வு நடத்தியிருநத சிறை கைதிகளுக்கான நன்னடத்தை அதிகாரிகள் நளினிக்கு வேலூரில் சொந்த வீடு இல்லை எனவும் காட்பாடியில் வாடகை வீடு மட்டும் உள்ளதனால் அவருக்கு பரோல் வழங்கக்கூடாது என சிறை நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளர்h.
மேலும் நளினியின் பரோல் தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 15ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.