வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும் எனவும் அதனை முஸ்லிம் மக்கள் எதிர்த்தால், ஆதரவைப் பெற்றுத்தருமாறு, முஸ்லிம் தலைமைகளிடம் கோரிக்கை விடுக்கவேண்டும் எனவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூhத்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்தி முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்றுள்ள நிலையில் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல எனவும் அது தந்தை செல்வாவின் கூற்று எனவும் இதனை யாரும் மாற்ற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாண சபை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தன் ஐயாவும் தமிழர்களைக் காட்டிக்கொதுத்துவிட்டனர் எனத் தெரிவித்த கருணா முஸ்லிம் தலைமைகளும் அவ்வாறுதான் செய்தன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது கட்சி வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென்ற கருத்தையே கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.