குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக வலுவுட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சினால் சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயசக்தி அபிமானி தேசிய போட்டியில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிலிருந்து கலந்துகொண்ட சண்முகம் ராஜி என்பவர் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
இப்போட்டியில் நாடாளாவிய ரீதியில் 356 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர்.
அதில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசெயலக பிரிவைச்சேர்ந்த சண்முகம் ராஜி என்ற ஒரு கையுடைய மாற்றுத்திறனாளி பாய்பின்னல் சுயதொழிலை மேற்கொண்டு தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
சுயசக்தி அபிமானி தேசிய விருது வழங்கும் நிகழ்வானது கடந்த 2.10.2017 அன்று கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது. சமூக வலுவுட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.