இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் பூராகவும் 20 சுற்றுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் 16-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜுகா ஓடுதளத்தில் நேற்று இடம்பெற்றது. பந்தய தூரமான 307.471 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்டனர்
இதில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன 1 மணி 27 நிமிடம் 31.194 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடிதது 25 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த சீசனில் அவரது 8-வது வெற்றி இதுவாகும். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் அரண்டாவதாக வந்து 18 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.
இதுவரை நடந்துள்ள 16 சுற்றுகள் முடிவில் சம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். அடுத்த போட்டி எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.