குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்படாது என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்பெய்னிடமிருந்து பிளவடைந்து கட்டலோனியா சுதந்திரமடைவதாக அறிவித்தாலும், அதனை ஐரோப்பிய ஒன்றிய நாடாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
கட்டலோனியா சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டால் நிச்சயமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் நீடிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கட்டலோனிய ஜனாதிபதி கார்ள்ஸ் பூகிடமண்ட் ((Carles Puigdemont ) அந்நாட்டு பாராளுமன்றில் உரையாற்ற உள்ளார்.
எவ்வாறெனினும் ஸ்பெய்ன் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்வதற்கு எந்த வகையிலும் தயாரில்லை என்ற நிலையில், கட்டலோனியாவும் சுதந்திரம் பெற்றுக்கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.