குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலைக்கு முடிவு காண்பதற்கான அடுத்த கட்ட நகர்வை யார் மேற்கொள்வது என்பது குறித்து ஐரோப்பிய ஓன்றியமும் பிரித்தானியாவும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான யோசனைகள் ஐரோப்பிய ஓன்றியத்திடமிருந்தே வெளியாகவேண்டும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்
தற்போது இதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு அவர்களிடமே உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள மே பிரித்தானியா சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் முன்னேற்றத்தை காண்பித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானியாவில்; வசி;க்கும் ஐரோப்பிய ஓன்றிய பிரதிநிதிகள் மற்றும் அயர்லாந்துடனான எல்லை போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளுடன் உடன்பாடொன்றை எட்டுவது குறித்து உறுதியாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அதனை அடைவதற்கு தலைமைத்துவமும் நெகிழ்ச்சிதன்மையும் அவசியம் இது எங்களிடமிருந்து மாத்திரமல்ல ஐரோப்பிய ஓன்றியத்திடமிருந்தும் வெளிப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அடுத்த சுற்றை எதிர்பார்த்திருக்கின்ற அதேவேளை இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கவேண்டிய வாய்ப்பு அவர்களிற்குள்ளது எனவும் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெரேசா மேயின் உரைவெளியாவதற்கு முன்னதாக கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஓன்றிய பேச்சாளர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது பிரித்தானியாவே என தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் தெளிவாக ஓழுங்குபடுத்தப்பட்ட விதத்திலேயே இடம்பெறுகின்றன எனதெரிவித்துள்ள ஐரோப்பிய ஓன்றிய பேச்சாளர் முதல் கட்ட பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.