உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் உட்பட 16 குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது , மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 10 குழந்தைகளும் குழந்தைகள் சிகிச்சைப் பகுதிய்pல் 6 குழந்தைகள் என மொத்தம் 16 குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் இநற்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான குழந்தைகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அனுமதிக்கப்பட்டிருந்தன என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த முறை ஒக்சிசன் பற்றாக்குறையாலோ அல்லது உரிய சிகிச்சை இல்லாமலோ குழந்தைகள் இறக்கவில்லை எனவும் உண்மையில் மிக மோசமான நிலையில்தான் அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன எனவும் குறித்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் இதே மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 63 குழந்தைகள் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது