இனப்பிரச்சனை குறித்த தீர்விற்கான இடைகால அறிக்கையை வடக்கு கிழக்கில் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என கூட்டமைப்பினரையும் மற்றயோரையும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண கேட்டுக்கொண்டுள்ளார்.
இடைகால அறிக்கை என்பதற்காக தயங்காது அதுபற்றி அதின் உள்ளடக்கம், அதிலுள்ள நன்மைகள்பற்றி மக்களிடையே இப்போதே கலந்துரையாடல்களை கூட்டமைப்பு மேற்கொள்ளவேண்டும் என்றும், இடைகால அறிக்கை தீர்வாக வர அதிக சாத்தியம் இருப்பதாகவும், வடக்கு கிழக்கு மக்கள் அதனை பூரணமாக ஆதரிக்க தயாராக இருக்கவேண்டும் எனும் கருத்துபட கலாநிதி ஜயம்பதி அறிவுறுத்தியுள்ளதோடு, மக்கள் இடகால அறிக்கையை முழுமையாக படித்து ஆயத்தம் செய்வதும் நல்லதே என தெரிவித்துள்ளார்.