180
புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவனியின் பொழுது திடீரென பெண்ணொருவர் பவனியில் இருந்த பெண்ணொருவரின் நான்கு அரை பவுண் தங்க சங்கிலியை அறுத்துள்ளார்.
உடனடியாகவே கடமையில் இருந்த காவல்துறையினா் குறித்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்து சங்கிலியையும் மீட்டனர். விசாரணைகளின் பின்னர் பெண்ணை நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்
Spread the love