இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் முகமாக 100 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட இராமர் சிலை அமைக்க அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. அயோத்தியின் சர்யூ நதிக்கரையில் சிலையை நிறுவ யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு ஆளுநர் ராம் நாயக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
பசுமைத் தீர்ப்பாயம் உள்ள அரச கட்டமைப்பு ஒப்புதல்கள் பெறப்பட்ட பின்னர் குறித்த சிலை அமைக்கப்படவுள்ளது. இதேவேளை ராமர் கதை காட்சியகத்தையும் அமைக்க யோகி ஆதித்யநாத் அரசு முடிவெடுத்துள்ளது.
195.89 கோடி ரூபா இந்தியப் பணத்தில் இதனை இவைகளை அமைக்க இந்திய மத்திய அரசின் சுற்றுலாத்துறைக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உத்திரபிரதேச மாநில அரசின் கோரிக்கையை ஏற்று ரூ.133.70 கோடியை உடனடியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.