Home இந்தியாபிரபாகரன் இறந்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன்- ராகுல் காந்தி

பிரபாகரன் இறந்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன்- ராகுல் காந்தி

by admin

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தபோது, தாம் மிகுந்த வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புத்திரருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களை சந்தித்து கலந்துரையாடிய போது    சந்திப்பில் பங்கேற்றவர்கள் ராகுலிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

இதன்போது ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பியதற்கு  பதில் அளித்த ராகுல்காந்தி, பிரபாகரன் இறந்ததும் அவரது சடலத்தை பார்த்து, தாம் மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறினார்.

இதுபற்றி, தமது சகோதரி பிரியங்காவிடம் தான் பேசியபோது, அவரும் அதே மனநிலையில் இருந்ததாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.. மற்றவர்களது துயரங்களில் பங்குகொள்வதுதான், காந்தி குடும்பத்தின் பாரம்பரியம் என்றும், ராகுல்காந்தி அங்கு மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More