168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவிற்கு ஸ்பெய்;ன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்பெய்னின் பிரதமர் மரியானோ ராஜோய் ( Mariano Rajoy ) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கட்டலோனியா மீது நேரடி அதிகாரம் பிரயோகிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் சுதந்திரப் பிரகடனம் குறித்து கட்டலோனியா தெளிவுபடுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் அடிப்படையில் கட்டலோனியாவின் சுயாட்சி அதிகாரங்களை ரத்து செய்ய உள்ளதாக ஸ்பெய்ன் அறிவித்துள்ளது. கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு அந்தப் பிராந்தியத்தின் 90 வீதமான மக்கள் ஆதரவளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love