குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய வழிகள் குறித்து ஆழமாக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளுமே தேசியப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருவதாகவும் ஏனைய உலக நாடுகளுடன் எவ்வாறு காத்திரமான முறையில் இணைந்து பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சைபர் தாக்குதல்கள், ஆளில்லா விமானங்களின் மூலமான தாக்குதல்கள், ஒத்துழையாமை, தற்கொலைகள், பயங்கரவாத தந்திரோபாயங்கள், ஊடக பிரச்சாரங்கள், கெரில்லா தாக்குதல் வழிமுறைகள், பீதியை ஏற்படுத்தல் என பல்வேறு வழிகளில் தேசியப் பாதுகாப்பிற்கு சவால் விடுக்கக்கூடிய சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.