இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் மனோ கணேசன், தமது வழக்குகள் அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையை எதிர்த்து பதினைந்து நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பிலும், இந்நிலைமை காரணமாக இன்று வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின்போது, இது தொடர்பில் வடக்கில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அங்கு சட்டம் ஒழுங்குக்கு பாதகம் இல்லை என தனக்கு வட மாகாண பொலிஸ் மா அதிபரும், இராணுவ தளபதியும் கூறியுள்ளதாக ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்குக்கு பாதகம் இல்லையானாலும் அரசியல்ரீதியாக இது பெரும் நெருக்கடி நிலைமையை வடக்கில் ஏற்படுத்தியுள்ளது என தான் ஜனாதிபதிக்கு எடுத்து கூறியதாகவும் இதையடுத்து, சட்டமா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி இதுபற்றிய சட்ட மாஅதிபரின் கருத்தை கேட்டு தெரிந்துக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளளார்
இந்த வழக்கின் சாட்சிகளாக இருக்கின்ற முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களே தங்களுக்கு பாதுகாப்பை கோரி வவுனியாவுக்கு செல்ல இயலாது என கூறுவதாகவும், இதனாலேயே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் கூறுவதாக, ஜனாதிபதி தன்னிடம் கூறினார்
இதுபற்றி தான் மேலும் ஆராய்ந்து முடிவை எடுப்பதாக ஜனாதிபதி தன்னிடம் கூறினார் எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.