156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈரான் அணுத் திட்டம் குறித்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கையொப்பமிட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய அரசாங்கம் சர்வதேச அணு திட்ட கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவில்லை என ட்ராம்ப் குற்றம் சுமத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானிய அணுத் திட்டங்களை தடுக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்காமல் இல்லை எனவும், ஈரான் மீது கடுமையான கொள்கை பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ட்ராம்ப் வெள்ளை மாளிகையில் ஆற்ற உள்ள உரையில் ஈரானை கடுமையாக சாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love