Home இலங்கைதொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு விசேட பாதுகாப்பு

தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு விசேட பாதுகாப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். தம்பிட்ட விஹாரையை பாதுகாப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கண்டி, கம்பளை இராச்சிய காலத்தில் இந்த விஹாரை நிர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More