குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் நான்கு முக்கிய அமைப்பாளர்கள் பணி நீக்கப்பட உள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள நான்கு முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு பணி நீக்கப்பட உள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சமால் ராஜபக்ஸ, விதுர விக்ரமநாயக்க, ரஞ்சித் சொய்சா மற்றும் அருந்திக்க பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்க உள்ளனர்.
இந்த வாரத்தில் குறித்த தொகுதி அமைப்பாளர்கள் பதவியை இழக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அங்கம் வகித்து கொண்டே கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் செயற்படுவதாக இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.