பெங்களூரில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் கவுரி லங்கேசின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் சந்தேக நபர்களின் உருவப்படத்தை இந்திய சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இரண்டு சந்தேக நபர்களின் மூன்று உருவ மாதிரிகளை வெளியிட்டிப்பதாகவும் நேரடி சாட்சியங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன எனவும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு 23-ல் இருந்து 25 வயதே இருக்கும் எனவும் சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அவர்கள் அங்கு வந்து தங்கியிருந்து கவுரியின் வீட்டை அவர்கள் நோட்டம் விட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி பதிவில் சந்தேக நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்துள்ளது எனவும் இப்போது வெளியிடப்பட்டுள்ள உருவப்படத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் குறித்து துப்பு தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.