Home இலங்கை48 தனிவீடுகள் பசறை கோணகலை தோட்ட மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

48 தனிவீடுகள் பசறை கோணகலை தோட்ட மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

by admin

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 48 தனிவீடுகள் பசறை கோணகலை தோட்ட  மக்களின் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.    தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் மற்றும் பதுளை மாவட்ட இணைப்பாளர் ராஜமணிக்கம் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மற்றும் பொருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திர சிகாமனி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது  50 லட்சம் நிதி ஒதுகீட்டில்  புதிய தனிவீட்டு திட்டத்திற்கான பாதைக்கான வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  இங்கு நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வீடுகளும் ‘வீரன் புரம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டிருப்பது குறிபிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More