குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு சென்ற ஜனாதிபதி அம்பாள்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்து அங்கு கலந்துகொண்ட மக்கள் மத்தயில் உரையாற்றினார்.
இதன் போது அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, பீ. ஹரிசன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் மாவட்ட அரச அதிபா் ஆகியோருடன் பொலீஸ்மா அதிபா் பூஜித ஜயசுந்தரவும் மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரையாற்றிக்கொண்டிருந்த போது காவல்துறை மா அதிபா் பூஜித ஜயசுந்தர அவ்வவ் போது உறங்கிக்கொண்டிருந்தார். இது சபையில இருந்த அனைவரினதும் பார்வையை காவல்துறைமா அதிபா் மீது திருப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.