193
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்னாலுள்ள கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் தீப்பரவல் ஏற்பட்ட கட்டடத்தில் சட்டத்தரணிகள் அலுவலகம் உள்ளிட்டன இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு நகர சபை தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுக்காட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love