குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் நிலைநாட்டவே, ஜனவரி 8ம் திகதி மக்கள் ஆணை வழங்கியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் மீதும் அரசாங்க அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அது தொடர்பில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் காலங்களிலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகி விளக்கம் அளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.