216
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை அறிமுகம் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் வாக்களிப்பு முறையின் மூலம் விசேட தேவைகளை உடையவர்கள் இலகுவாக வாக்களிப்பதற்கு முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ரத்மலானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love