அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுடனான மோதலை, ராஜதந்திர முறைப்படியே தீர்க்க விரும்புவதாகவும் வடகொரியா முதல் குண்டு போடும் வரை இது தொடரும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
தடைகளும், ராஜதந்திரமும், வடகொரியாவின் அணுஆயுத திட்டங்களுக்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒற்றுமையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
சர்வதேச நாடுகளின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வட கொரியா தனது ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதோடு, இரண்டு ஏவுகணைகளை ஜப்பானுக்கு மேல் செலுத்தியிருந்தது.
ஐ.நாவின் தடையுள்ள போதிலும், வடகொரியா, அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில், தனது அணுஆயுதங்களை மேம்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.