Home இந்தியா அலகாபாத் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் மாணவர் பிரிவு அமோக வெற்றி:-

அலகாபாத் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் மாணவர் பிரிவு அமோக வெற்றி:-

by editortamil

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில், பாஜக ஆதரவு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை பின்னுக்குத் தள்ளி சமாஜ்வாதி கட்சியின் மாணவர் பிரிவு அமோக வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக் கழகத்துக்கு மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
மாணவர் சங்கத்தின் 5 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், இணை செயலாளர், கலாசார செயலாளர் ஆகிய 4 பதவிகளை சமாஜ்வாதி கட்சியின் மாணவர் பிரிவு கைப்பற்றியுள்ளது.
பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றியது.

தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ சோஷலிச கொள்கைக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி என்று அவர் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More