குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழரnஉடை ழக துரளவiஉந ழக Pநயஉந வின் 2017ம் ஆண்டுக்கான சமாதான தூதுவர் விருது இம்முறை வீ.ஆனந்த சங்கரிக்கு வழங்கப்பட்டது. கடந்த 14.10.2017 அன்று மாலை அக்கரைப்பற்று மெங்கோ கார்டன் ஹோட்டலில் இடம்பெற்ற தேசகீர்த்தி விருதுகள் வழங்கும் நிகழ்வில் குறித்த விருது அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நல்லிணக்க மற்றும் சமத்துவத்துக்காக பாடுபட்ட ஏனைய 30க்கும் மேற்பட்ட சமாதான நீதவான்களுக்கும் கவுன்சிலின் தலைவர் மஹேஸ்வரன் ஆகியோருக்கும் தேசகீர்த்தி விருதுகள் வழங்க்கப்பட்டது. நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட கூலியற்று வேலைசெய்யும் சமாதான தொண்டர்களான (ஜே.பி) உத்தமர்களை போற்றும் கௌரவிக்கம் நிகழ்வாக இது இடம்பெற்றது.
சமாதான நீதவான்களின் பேரவையின் தெற்காசசியாவிற்கான இலங்கை வலையமமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறிதத்த நிகழ்வில் சமாதானத்திற்காக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நோக்குடன் குறித்த விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2006ம் ஆண்டு யுனெஸ்கோவினால் அதி உயர் விருதான சமாதானத்திற்கும் சகிப்பு தன்மைக்குமான விருது வீ.ஆனந்தசங்கரி அவர்களிற்கு வழங்கியிருந்தது. இலங்கை தீவில் சமாதானத்திற்காக உழைத்த இவருக்கு சமாதான தூதுவர் விருது வழங்கப்பட்டு கௌவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.