166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தம்மை பழிவாங்கும் நோக்கில் அப்பாவி கட்சி ஆதரவாளர்கள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நீதிமன்றின் உத்தரவினை மீறியதாகக் குற்றம் சுமத்தி தமது ஆதரவாளர்கள் கைது செய்பய்பட்டுள்ளதாகவும் எனினும் ஊடகவியலாளரை கன்னத்தில் அறைந்த துணை காவல்துறை அத்தியட்சகருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதில் முனைப்பு காட்டி வருவதாகவும் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதற்கு ஆதரவளிக்கப்படாது எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Spread the love