155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒருவரை கொன்றுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவிற்கான ஐ.எஸ் தீவிரவாத இயக்கத் தலைவராக கருதப்படும் ஐசிலோன் ஹபிலோன் (Isnilon Hapilon ) ஐ கொலை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிகவும் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஐசிலோனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிலிப்பைன்ஸின் மாராவி பகுதியில் வைத்து படையினர் நடத்திய தாக்குதல்களில ஐசிலோன் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love